பணமில்லா மருத்துவ காப்பீடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் கோரிக்கை
விழுப்புரம் மாவட்ட சிபிஎம் கட்சி அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் விழுப்புரம் மண்டலக்குழு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட சிபிஎம் கட்சி அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் விழுப்புரம் மண்டலக்குழு கூட்டத்தில் மின்வாரியத்தில் ஓய்வுபெற்றோருக்கு பணமில்லா மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மண்டல கூட்டத்திற்கு விழுப்புரம் கிளைத்தலைவர் ஜி.ஜெயராமன் தலைமை தாங்கினார், கிளைச் செயலாளர்கள் கடலூர் டி.வெங்கடாசலம், கள்ளக்குறிச்சி ஆர்.ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டத்தில் மாநில செயலாளர்கள் டி.திருத்துவராஜ், கே.நடராஜன், மண்டல செயலாளர் தங்க.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு சங்க நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக பேசினர்,
கூட்டத்தில் மின் வாரியத்தில் ஓய்வு பெற்றோருக்கு பணமில்லா மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், மின்துறை பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். தனியார் மயத்தை கைவிடவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நியாயமான முறையில் நிரப்ப வேண்டும். மின் ஊழியர் களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும். மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பும் போது ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கூட்டத்தில் விழுப்புரம் கிளைச் செயலாளர் எம்.புருசோத்தமன், திருவண்ணாமலை கிளைத்தலைவர் சந்திரசேகர், செயலாளர் நீதிமாணிக்கம், மாநில செயற்குழு உறுப்பினர் டி.பொற்கலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu