விழுப்புரம் வாலிபர் சங்கத்தினர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து

விழுப்புரம் வாலிபர் சங்கத்தினர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து
X
விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினர் மீது போடப்பட்ட வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது

கடந்த 2019ல் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விழுப்புரம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சே.அறிவழகன், மாவட்ட தலைவர் எஸ்.பிரகாஷ், பொருளாளர் எஸ்.பார்த்திபன் உள்ளிட்ட 27 பேர் மீது விழுப்புரம் மாவட்ட காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் குற்றவியல் நடுவர்-1 நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாலிபர் சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் முடிவில் வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சிறப்பாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!