விழுப்புரத்தில் வீட்டின் முன்பு நின்ற கார் திடீரென எரிந்ததால் பரபரப்பு

விழுப்புரத்தில் வீட்டின் முன்பு நின்ற கார் திடீரென எரிந்ததால் பரபரப்பு
X

விழுப்புரத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்ட கார் எரிந்து சேதமானது

விழுப்புரத்தில் வீட்டின் முன்பு நின்றிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்

விழுப்புரம் ஆபேஷா தக்கா தெருவைச் சேர்ந்தவர் விஜய் கார்த்திக் (27). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது சொகுசு காரை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு, வீட்டுக்குள் சென்றார்.

பிற்பகல் சுமார் 3 மணியளவில் திடீரென காரின் முன்பக்கம் புகை கிளம்பி தீப்பற்றி உள்ளது, இதனால், அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கார் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.

உடனே இது குறித்து விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் முழுவதும் சேதமடைந்தது.

இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future