ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ராபி பருவ இதர பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை வேளாண் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ.ரமணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் உள்ள 294 கிராமங்களில் நவரை நெல் பயிா், 34 குறு வட்டங்களில் நிலக்கடலை, கரும்பு பயிா்கள், 14 குறு வட்டங்களில் எள் பயிருக்கு காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டது.
மாவட்டத்துக்கு காப்பீட்டு நிறுவனமாக ஏஐசிஎல் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. ராபி பருவத்தில் காப்பீடு செய்ய ஏக்கா் ஒன்றுக்கு நெல்(நவரை) ரூ.442, நிலக்கடலை ரூ.394.21, எள் ரூ.143.,75, கரும்புக்கு ரூ.2,568.80 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு நிலக்கடலைக்கு ஜனவரி 17ம் தேதியும், நெல், எள் ஆகிய பயிா்களுக்கு ஜனவரி 31ம் தேதியும், கரும்புக்கு 31.8.2022-ஆம் தேதி கடைசி நாளாகும்.
அனைத்து ஆவணங்களையும் சரியாக அளித்து பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீடு தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu