பாம்பை காப்பாற்ற நினைத்து ஆட்டோ மீது மோதிய பேருந்து: ஆட்டோ ஓட்டுனர் உயிர் ஊசல்

பாம்பை காப்பாற்ற நினைத்து ஆட்டோ மீது மோதிய பேருந்து: ஆட்டோ ஓட்டுனர் உயிர் ஊசல்
X

சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு மறுபுறம் சென்று நின்ற அரசு பேருந்து 

விழுப்புரம் அருகே ரோட்டில் வந்த பாம்பை காப்பாற்ற நினைத்து ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்

சென்னையிலிருந்து ஒரு அரசுப்பேருந்து 30 பயணிகளுடன் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இன்று காலை விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் 8 அடி நீளமுள்ள பாம்பு மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது,

பாம்பின் மீது ஏற்றக் கூடாது என்ற காரணத்தினால் பேருந்து ஓட்டுனர் பேருந்தை சடன் பிரேக் போட்டார், அதனால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் கட்டையை உடைத்துக் கொண்டு அடுத்த சாலை மார்க்கத்திற்கு ஓடியது,

அப்போது அவ்வழியே எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதில் விழுப்புரம் பூந்தோட்டம் பாதை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அறிவரசன் 31 படுகாயமடைந்தார், உடனடியாக தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையில் கிடந்த பாம்பு

இதில் சோகம் என்னவென்றால், சிறுவர்கள் விளையாட்டாக செத்த பாம்பை நடுரோட்டில் போட்டுள்ளனர்,

ஒரு பாம்பை காப்பாற்ற நினைத்து ஆட்டோ ஓட்டுனர் உயிர் ஊசலாடி வருவது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story