அரசு பேருந்துகளை சிறைபிடிப்போம்: மாற்றுத்திறனாளிகள் எச்சரிக்கை

அரசு பேருந்துகளை சிறைபிடிப்போம்: மாற்றுத்திறனாளிகள் எச்சரிக்கை
X

அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள் 

தங்களை அரசுப் போக்குவரத்துக் கழகம் உதாசீனப் படுத்தினால் பேருந்து சிறைபிடிக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என மாற்றுத்திறனாளிகள் கூறினர்

மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரண பேருந்தில் செல்லும்போது அவர்களுக்கு துணையாக வரும் துணையாளர்களுக்கு இலவச பயணம் வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது

அரசு ஆணையை அமுல்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு, மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு துணையாக வரும் துணையாளர்களுக்கு இலவச பயணம் வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது, ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் சாதாரண பேருந்துகளில் நடத்துனர்கள் அரசாணையை மதிக்காமல் டிக்கெட் எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர், மேலும் மாற்றுத்திறனாளிகள் என்றும் பாராமல் தரக்குறைவாக பேசுகின்றனர் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்,

இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!