லஞ்சம் வாங்கிய வழக்கில் விஏஓ- வுக்கு 3 ஆண்டுகள் சிறை

லஞ்சம் வாங்கிய வழக்கில் விஏஓ க்கு 3 ஆண்டு சிறை
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில், கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், குமளம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் ( 40), விவசாயி. இவர், கடந்த 2014-ம் ஆண்டில் பட்டா மாற்றம் செய்வதற்காக அப்போதைய குமளம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த சீனிவாசன் (35) என்பவரிடம் மனு கொடுத்தார். மனு மீது நடவடிக்கை எடுத்து பட்டா மாற்றம் செய்து தர, ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டுமென சீனிவாசன் கூறினார்.
இதுகுறித்து அய்யனார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார், ரசாயன பொடி தடவிய பணத்தை, வாக்கூர் என்ற இடத்தில் வைத்து, கிராம உதவியாளரான ரமேஷிடம் கொடுத்தார். அந்த பணத்தை அவர் பெற்று சீனிவாசனிடம் கொடுத்த போது அவர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) புஷ்பராணி, குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும், ரமேசை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu