விழுப்புரத்தில் ரத்ததான முகாம்

விழுப்புரத்தில் ரத்ததான முகாம்
X
விழுப்புரத்தில் தேராபந்த் இளைஞா் அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது

அகில பாரத தேராபந்த் இளைஞா் அமைப்பு, ஆா்ய வைஸ்ய சமூகம் ஆகியவை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் விழுப்புரம் வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா தலைமை தாங்கினார்.முகாமை

விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ இரா.லட்சுமணன் கலந்து கொண்டு தொடக்கி வைத்து, இளைஞர்களை பாராட்டி பேசினார். முகாமில், தேராபந்த் அமைப்பின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் நிதிஷ்குமாா், செயலா் வைஷால் புரத் ஆகியோா் உட்பட 100-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு கொடையாக வழங்கப்பட்டது.

இதேபோல, விழுப்புரத்தில் 10 இடங்களில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா