எஸ்சி- எஸ்டி கான பின்னடைவு பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எம்பி ரவிக்குமார்
எஸ்சி எஸ்டி கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தி மத்திய சமூக நீதித்துறை அமைச்சரிடம் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் கோரிக்கை மனு அளித்தார்.
மத்தியில் எஸ்சி எஸ்டி-கான பின்னடைவு பணியிடங்களை நிரப்ப வேண்டும் எம்பி.ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்சி எஸ்டி கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தி மத்திய சமூக நீதித்துறை அமைச்சரிடம் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் கோரிக்கை மனு அளித்தார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 20ஆம் தேதி இது தொடர்பாக அவர் எழுப்பிய வினாவுக்கு பிரதமர் அமைச்சகத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசின் பத்து துறைகளில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்தது. அந்த இடங்களை நிரப்புவதற்கு அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு சமூக நீதித்துறை அமைச்சரிடம் ரவிக்குமார் எம்பி கோரிக்கை மனு அளித்தார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமான பேர் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இவ்வளவு இடங்கள் காலியாக இருப்பது அந்த சமூகத்தையே பாதிப்பதாக உள்ளது. கல்வித்துறையில் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 81 சதவீதம் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. எனவே தாங்கள் இதில் கவனம் செலுத்தி உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு எஸ்சி எஸ்டி பணியிடங்களை நிரப்புவதற்கு பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார். நிச்சயம் அது நிரப்பப்படும் என்று அமைச்சர் பதிலளித்ததாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu