விழுப்புரத்தில் தமிழக அரசை எதிர்த்து பாஜக உண்ணாவிரதம்

விழுப்புரத்தில்  தமிழக அரசை எதிர்த்து பாஜக உண்ணாவிரதம்
X

போராட்டத்தில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச்செயலாளருமான மீனாட்சி பேசுகிறார் 

விழுப்புரம் நகராட்சி திடலில் தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து இன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது,

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார், போராட்டத்தில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச்செயலாளருமான மீனாட்சி கலந்து கொண்டு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாக இருக்கிறது. காவல் நிலையத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கிறது, திமுக அரசுகொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் படும் துன்பத்தை திமுக ஆட்சி மறந்து விட்டது என தமிழக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட பொருளாளர் சுகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் திருநாவுக்கரசு, செய்தி தொடர்பாளர் ராஜா உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் விழுப்புரம் நகர தலைவர் வி.வடிவேல் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!