அதிமுக முன்னாள் அமைச்சருக்கு பாஜக கே.டி.ராகவன் பதிலடி

அதிமுக முன்னாள் அமைச்சருக்கு பாஜக கே.டி.ராகவன் பதிலடி
X

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவை சேர்ந்த  கே.டி.ராகவன்

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பாஜக கூட்டணியால் தான் அதிமுக தோல்வி அடைந்தது என நேற்று கூறியதற்கு பாஜக கே.டி.ராகவன் பதிலடி

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் விரைவில் வர இருகின்ற உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்டத்தில் கட்சியினரிடையே ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

கடந்த செவ்வாய்கிழமை மரக்காணம் ஒன்றியத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகளிடையே பேசும்போது, கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என கூறினார்.

இதற்கு இன்று விழுப்புரம் வந்திருந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், அதிமுக ஆட்சியில் எடுத்த சில தவறான முடிவுகள் தான் தோல்விக்கு காரணம் என பதிலடி கொடுத்தார். இதனால் பாஜக, அதிமுக கூட்டணி உள்ளாட்சியில் நீடிக்குமா என்ற பலமான கேள்வி எழுந்துள்ளது

Tags

Next Story
ai and business intelligence