அண்ணாமலை கைது கண்டித்து விழுப்புரத்தில் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம்

அண்ணாமலை கைது  கண்டித்து விழுப்புரத்தில் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம்
X

அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

BJP Protest -அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ.க.வினர் விழுப்புரத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.

BJP Protest -பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூரில் பாரதீய ஜனதா கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து திண்டிவனம் மேம்பாலத்துக்கு கீழ் கொட்டும் மழையில் மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ் தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு நகர தலைவர் ரகு, மாநில வக்கீல் பிரிவு செயளாளர் செந்தில், மாவட்ட துணை தலைவர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக அரசை கண்டித்தும், அண்ணாமலையை விடுதலை செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நகரதலைவர் முருகன் மற்றும் வக்கீல் பிரிவு தலைவர் ராஜா, நகர நிர்வாகிகள் நாகப்பன், ராதிகா, செங்கேனி, அன்னா கனேஷ், மதி, பாலாஜி, ராமசந்திரன், நாகபாசம், தண்டபாணி, பாலாஜி, நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணெய்நல்லூரில் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கணடித்து திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பா.ஜ.க. மாநில கூட்டுறவு பிரிவு துணை தலைவர் ஏ.ர.வேலு தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் தென்னரசு, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் விழுப்புரம் காந்தி சிலை அருகில் நகர தலைவர் வடிவேல் பழனி தலைமையில் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொருளாளர் சுகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவ.தியாகராஜன், வர்த்தக அணி நிர்வாகி வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டு அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம் சமரசம் பேசி மறியலை கைவிடச்செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கைது கண்டித்து பா.ஜ.க.வினர் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம், மறியல் ஆகியவற்றில் தொடர் மழையை பொருட்படுத்தாமல் ஈடுபட்டனர்.

போராட்டம் நடைபெற்ற சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. அதனால் போக்குவரத்து போலீசாருக்கு மழையின்போது போக்குவரத்தை சரி செய்வதில் சிறிது நேரம் ஆங்காங்கே சிரமம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்