ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு பாஜக தலைவர் ஆறுதல்

ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு பாஜக தலைவர் ஆறுதல்
X

ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞகள் குடும்பத்தினருக்கு அண்ணாமலை ஆறுதல் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்த குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபர்கள் குடும்பத்தினருக்கு அண்ணாமலை ஆறுதல் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் நரசிம்மன் மகன் சதீஷ்(வயது 30), பிரகாசம் மகன் பரத் என்கிற செந்தில்(30). நண்பர்களான இவர்கள் இருவரும் பேரங்கியூர் பிடாகம் தென்பெண்ணையாற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் தேடி வந்த நிலையில், எனதிரிமங்கலம் பகுதியில் சதீஷ் உடல் கரை ஒதுங்கியது. பரத்தின் உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்படுத்தினர்.அந்த உடல் எலும்பு கூடாக கிடைத்தது.இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சனிக்கிழமை சதீஷ், பரத் ஆகிய இருவரின் வீடுகளுக்கும் நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!