வங்கிகள் வேலைநிறுத்தம், விழுப்புரம் மாவட்டத்தில் பண பரிவர்த்தனை பாதிப்பு
வங்கிகள் தனியார் மயத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடக்கும் வேலைநிறுத்த போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் 136 வங்கி கிளைகளில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிரண்டு அதிகாரிகள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். இருப்பினும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால் வங்கிகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன. ஒரு சில வங்கிகளில் அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் வராததால் அவை பூட்டிக்கிடந்தன.
ஏற்கனவே மாதத்தின் 2-வது சனிக்கிழமையான கடந்த 13-ந் தேதியும், 14ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கி பணிகள் அனைத்தும் முடங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், மாவட்டத்தில் ரூ.300 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை, காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. ஏ.டி.எம். சேவையும் முடங்கியதால் அந்த மையங்களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
விழுப்புரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க முன்னாள் தலைவர் முருகன் கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் ஸ்டான்லி ராஜா, முகேஷ், நீலகண்டன், விஜயகுமார், ஜான்சிராணி, அமீர்பாஷா, நாராயணசாமி, பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu