/* */

விழுப்புரம் மாவட்டத்தில் கோயில் மற்றும் வார சந்தைகளுக்கு தடை

தொற்றுகளை கட்டுப்படுத்தும் வகையில் கோயில்கள், வாரசந்தைகளுக்கு செல்ல ஐந்து நாட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் அறிவிப்பு

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் கோயில் மற்றும் வார சந்தைகளுக்கு தடை
X

விழுப்புரம் கலெக்டர் மோகன் 

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும், கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வகையான சந்தைகள் மற்றும் வார சந்தைகள் செயல்பட தடையும், 14.01.2022 முதல் 18.01.2022 வரை ஐந்து நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்கள் மற்றும் கோவில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக அரசு கொரோனா, ஒமிக்கிரான் தொற்றுகளை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீடித்துள்ளது, அதனையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில், 14.01.2022 முதல் 18.01.2022 வரை 05 நாட்கள் அனைத்து வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கோவில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது. மேலும், 16.01.2022 ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் அமுல்படுத்தபடுகிறது.

பொங்கல் திருநாளில் பொதுமக்கள் அதிகமாகவும், கூட்டமாகவும் சேர்ந்து பண்டிகை கொண்டாட வாய்ப்புள்ளதால் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படவுள்ள அனைத்து திருவிழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்படுகிறது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான வார சந்தைகள் தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

மேலும், கடைகள் மற்றும் வணிக வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அரசு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளும்பொழுது இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றுகளை கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும்.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும். அனைத்து கடைகளிலும் உடல் வெப்பநிலை பரிசோதனைமானி, கிருமி நாசினி போன்றவைகள் கட்டாயம் வாடிக்கையாளர்கள், கடைப்பணியாளர்கள் பயன்படுத்துவதை கடை மற்றும் வணிக நிறுவனங்களில் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் உறுதி செய்திட வேண்டும். இவ்வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடைகள் மற்றும் வனரிக நிறுவனங்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீலிடப்படும்.

கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை காத்திட மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு தெரிவித்து உள்ளார்.

Updated On: 13 Jan 2022 1:48 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...