விழுப்புரத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

விழுப்புரத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
X

மஸ்ஜிதே முகமதிய ஹக்ல ஹதிஸ் பள்ளிவாசல் சார்பாக நடந்த தொழுகையில் பெண்கள்.

விழுப்புரத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.

தமிழகத்தில் இன்று முதல் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில், பக்ரீத் பண்டிகையையொட்டி, இன்று முஸ்லிம்களின் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள மஸ்ஜிதே முகமதிய ஹக்ல ஹதிஸ் பள்ளிவாசல் சார்பாக இன்று பக்ரீத் தொழுகை நடைபெற்றது. இதில் பெண்களும் திரளாக கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி