விழுப்புரம் அருகே ஐயப்பன் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

விழுப்புரம் அருகே ஐயப்பன் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு
X

பைல் படம்.

விழுப்புரம் அருகே ஐயப்பன் கோயிலில் பூட்டை உடைத்து உண்டியில் உள்ள பணத்தை மறுமணவர்கள் கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே கிராமத்தை சேர்ந்த மோகன்(வயது 55) என்பவர் பூசாரியாக உள்ளார்.

இவர் இரவு கோவிலில் பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை பூஜை செய்ய கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

உடனே உள்ளே சென்று பார்த்தபோது கோவில் பிரகாரத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை பணம் கொள்ளை போயிருந்ததை கண்டு அறிந்து அதிர்ச்சியடைநது.

இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார், அந்த கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. அந்த உண்டியலில் சுமார் ரூ.5 ஆயிரம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!