விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு ஓவியம்
விழுப்புரம் புதிய பேருந்து நிலைய சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம் வரையும் பணி நடைபெற்றது.
Villupuram District News - விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சுவர்களில் இன்று மக்களுக்கு பயன்படும் பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், இன்று (25.06.2022) நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் ஆகியன இணைந்து, பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சுவர்களில், சுவர் ஓவியம் அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், தலைமை தாங்கி, தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஓவியர் சங்க உறுப்பினர்கள் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணியினை தொடங்க்கி வைத்து, பார்வையிட்டார். நகராட்சி புதிய பேருந்து நிலைய வளாக சுற்றுச்சுவர்களில் என் நகரம் - என் பெருமை" என்ற நிலையை பொதுமக்கள் உருவாக்கும் வகையில், பல்வேறு வகையிலான விழிப்புணர்வு குறித்த சுவர் ஓவியங்கள் வரையும் பணியை விழுப்புரம் தூய இருதய மேல்நிலைப்பள்ளியினைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பொதுமக்கள் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருந்திடவும் மற்றும் தூய்மையினை பாதுகாக்க உறுதுணையாக இருந்திட வேண்டும் என அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகர்மன்ற துணைத் தலைவர் சித்திக் அலி, நகர்மன்ற உறுப்பினர்கள் தீபா, சங்கர், ஸ்ரீதேவி, தமிழ்நாடு ஓவியர் சங்க மாவட்ட தலைவர் அன்பரசு மற்றும் ஓவியர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu