/* */

விழுப்புரம் அருகே 14 அம்ச கோரிக்கை விளக்க விழிப்புணர்வு பிரசார நடைபயணம்

விழுப்புரம் அருகே 14 அம்ச கோரிக்கை விளக்க விழிப்புணர்வு பிரசார நடைபயணம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே 14   அம்ச கோரிக்கை விளக்க விழிப்புணர்வு பிரசார நடைபயணம்
X

விழுப்புரம் அருகே விவசாய சங்கங்கள் சார்பில் விழிப்புணர்வு பிரசார நடைபயணம் நடைபெற்றது.

14- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் வரும் ஏப்ரல் 5-ந்தேதி நடக்கவுள்ள பேரணியை மக்களிடையே விளக்கும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சி.ஐ.டி.யு, மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியன இணைந்து நாடு முழுவதும் நடைபயண பிரச்சார இயக்கம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டம்,காணை கடை வீதியில் நடைபெற்ற நடைப்பயண நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்ட செயலாளர் ஏ.நாகராஜன், சி.ஐ.டி.யு .மாவட்ட பொருளாளர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிகழ்ச்சியை விக்கிரவாண்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி தொடங்கி வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் இந்த நடைப்பயணம் ஏன், எதற்காக என்பதை விளக்கி தொடக்கவுரையாற்றினார்.நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் என்.பழனி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.தாண்டவராயன், மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி,டிஎன்.எம்.எஸ்.ஆர்.ஏ சங்க மாநில துணைச்செயலாளர் ஆர்.கணபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பி.சிவராமன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சங்கர், டாஸ்மாக் சங்க மாநில செயலாளர் ஆர்.கணபதி,டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர்வி.சிங்காரவேலு, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு நடைபயணத்தை வாழ்த்தி பேசினர்.

நடைபயணத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட தலைவர் எஸ்.ராஜாராம், வட்ட பொருளாளர் என்.ரங்கநாதன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குறைந்தபட்ச ஊதியம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த முறையை ஒழித்து, ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், வேளாண் விளைபொருளுக்கு ஒன்றரை மடங்கு ஆதார விலை வழங்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பு மற்றும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 14- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு மக்களிடம் விளக்கியவாறு காணையில் தொடங்கிய பேரணி பெரும்பாக்கம், தோகைபாடி, இந்திரா நகர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன்பு முடிவடைந்தது.

பேரணியில் வந்தவர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி கோரிக்கைகளை விளக்கி நிறைவுரையாற்றினார்.

Updated On: 11 March 2023 11:55 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!