கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு ஜே ஆர் சி கன்வீனருக்கு விருது

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு  ஜே ஆர் சி கன்வீனருக்கு விருது
X
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக களப்பணி ஆற்றியதற்கு ஜே ஆர் சி கன்வீனர் மா பாபு செல்லத்துரைக்கு விருது வழங்கி கௌரவித்தனர்

கடந்த ஆண்டில், பள்ளிக் கல்வித் துறையின் பாராட்டை பெறும் விதத்தில் கொரோனா முன் களப்பணியாற்றிய சிறுபான்மைப் பள்ளியான முட்டத்தூர். ஒய்க்காப் மேனிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் முனைவர். ம.பாபு செல்வதுரைக்கு பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நல்லாசிரியர் விருதினை அமைச்சர் மஸ்தான் வழங்கி பாராட்டினார்.

அத்துடன் தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது பெற்ற ஜே.ஆர்.சி நிர்வாகிகள் சரசு, இரா. மாலினி தேவி ஆகியோரையும் அமைச்சர் வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார், தமிழ்நாடு சிறுபான்மைப் பள்ளி அனைத்து ஆசிரியர் பேரவை நிர்வாகிகள் , எஸ். ஆம்ஸ்ட்ராங், பி.எஸ்.ஸ்டாலின், ஜே. டேவிட் ஜெயபிரகாஷ். பிரேம்சந்தர், ரிச்சட் செல்வக்குமார்.வடிவழகன், ஜேம்ஸ், பிரியா ராஜ்குமார். விழுப்புரம் கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி நிர்வாகிகள் எஸ். இரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்