பெண்கள் முன்னேற்றத்துக்கு சேவையாற்றிய பெண்களுக்கு விருது: ஆட்சியர் அழைப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன்
பெண்கள் முன்னேற்றத்துக்காக சேவையாற்றிய பெண்கள் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன் வெளியிட்ட தகவல்: சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், இருத்தல் வேண்டும். 18 வயது மேற்பட்டவராகவும,
குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக வரவேற்கப்படுகின்றன. சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்
சமூக சேவை நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.எனவே இவ்விருதுக்கு தகுதியானவர்கள், தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) இணையதளவழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் 30.06.2022 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu