ரயில் முன்பு பாயிந்து ஷேர் ஆட்டோ ஓட்டுனர்

ரயில் முன்பு பாயிந்து ஷேர் ஆட்டோ ஓட்டுனர்
X

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ்

விழுப்புரம் பகுதியில்வருமானம் இன்றி தவித்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் மன உளைச்சலில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்டமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, இவரது மகன் ஷேர் ஆட்டோ ஒட்டுனர் பிரகாஷ் வயது 37, இவர் அப்பகுதியில் பல ஆண்டு காலமாக ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார்,

கடந்த சில மாதங்களாக கொரணா காலகட்டத்தில் வருமானம் இன்றி தவித்ததாக கூறப்படுகிறது. அதனால் குடும்பம் நடத்த முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குடும்ப வறுமையை நினைத்து கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது,

இந்நிலையில், ன்று காலை விழுப்புரம் ரயில் நிலையம் நோக்கி வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார், உடனடியாக தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட பிரகாஷுக்கு லலிதா என்ற மனைவியும், யுவன் ராஜா, பிரவின் ராஜா என்ற மகன்களும் உள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
highest paying ai jobs