விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
தீக்குளிக்க முயற்சித்த கண்ணன் குடும்பத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை ஒன்றியம், மாம்பழப்பட்டு கிராமம், தலித் பகுதியை சேர்ந்தவர் முத்து மகன் கண்ணன் வயது (35), அவரது மனைவி தேவகி வயது (30) மற்றும் மூன்று குழந்தைகளுடன் இன்று விழுப்புரத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.
அப்போது மனு கொடுக்க வந்த கண்ணன் குடும்பத்தினர் தங்கள் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென எடுத்து தங்கள் தலை முதல் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை தடுத்து, அவர்கள் அனைவர் மீதும் அருகே இருந்த தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீரை ஊற்றி காப்பாற்றி, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் நாள் இன்று என்பதால் அங்கு மனு கொடுக்க வந்த நூற்றுக்கணக்கான மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu