பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்

பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
X

கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்-மாவட்ட கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பாடுபட்ட, 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், 18 வயது வரை பெண் கல்வி கற்றலை உறுதி செய்தல். பெண் குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தலுக்கு பாடுபட்டு வீரதீர செயல் புரிவோருக்கு மாநில அரசின் விருது வழங்கப்படுகிறது.

இதில் சிறந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தை தினமான வரும் ஜனவரி 24ம் தேதி பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படுகிறது.இந்தாண்டு மாநில விருது வழங்க, 18 வயதிற்குட்பட்ட தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து 28ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உட்பட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் உரிய முன்மொழிவுகளோடு சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் கலெக்டர் பரிந்துரையோடு, சமூகநல ஆணையரகத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வுக்குழு மூலம் பரிசீலனை செய்து, வரும் ஜனவரி 24ம் தேதி, மாநில விருது வழங்கப்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future