மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வாங்க

விழுப்புரம் மாவட்டம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள கொத்தடிமை தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளை அடையாளம் கண்டு அடிப்படை கணக்கெடுப்பு மேற்கொண்டு. மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை கொண்டு சிறப்பு சுய உதவிக்குழு அமைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், மீண்டும் கொத்தடிமை தொழிலில் ஈடுபடாமல் பாதுகாத்திடவும், அவர்களுக்கு பிற துறைகளில் நலத்திட்டங்களை பெற்று தரவும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (District Project Co-ordinator) ஒருவர் நியமனம் செய்திட கீழ்கண்ட தகுதிகள் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். MSW கல்வித் தகுதி பெற்றிருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும்.
குறைந்த பட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் கள அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
இரு சக்கர வாகனமும், ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் சார்ந்த பணி மேற்கொண்ட முன் அனுபவமும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம். தமிழ்நாடு புதுவாழ்வு திட்டம் ஆகியவற்றில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாவட்ட,மாநில அளவில் தகவல் பரிமாற்றம் மற்றும் அறிக்கை தயார் செய்வது உள்ளிட்டவற்றில் நன்கு திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.15000 (ரூபாய் மற்றும் பயணப்படியாக ரூ.5000 (ரூபாய் ஐந்தாயிரம்) பதினைந்தாயிரம்) மற்றும் பயணப்படியாக வழங்கப்படும்.
மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இணை இயக்குநர்,திட்ட இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை கட்டட வளாகம் ( மாவட்ட பதிவாளர் அலுவலகம் எதிரில்) மாவட்ட ஆட்சியர் பெருந்திட்டவளாகம், விழுப்புரம் 605602 என்ற முகவரிக்கு வரும் 29.07.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu