திண்டிவனத்தில் வரும் 27-ம் தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

திண்டிவனத்தில் வரும் 27-ம் தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
X

பைல் படம்.

திண்டிவனத்தில் வரும் 27ம் தேதி அதிமுகவினர் திமுகவை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்துள்ளனர்.

விழுப்புரத்தில் அதிமுக நகர நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர அவைத் தலைவா்கள் கதிரவன், பால்ராஜ் ஆகியோா் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். கூட்டத்தில், மரக்காணத்தில் அதிமுக அரசு கொண்டு வந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்ததைக் கண்டித்து, திண்டிவனத்தில் வருகிற சனிக்கிழமை (ஆக.27) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

அதிமுக அரசின் ஜெயலலிதா பல்கலைக்கழகம், டைட்டல் பூங்கா போன்ற திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். எல்லிஸ்சத்திரம் தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நகரச் செயலா்கள் பசுபதி, ராமதாஸ் ஆகியோா் பேசினா். மாவட்ட மாணவா் அணிச் செயலாளர் சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!