விழுப்புரம் மாவட்ட தடயவியல் உதவி இயக்குநருக்கு அண்ணா பதக்கம்

விழுப்புரம் மாவட்ட தடயவியல் உதவி இயக்குநருக்கு அண்ணா பதக்கம்
X

அண்ணா விருது பெறும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் தே.சண்முகம்

விழுப்புரம் மாவட்டத்தில் தடயவியல் உதவி இயக்குநருக்கு அண்ணா பதக்கம் கிடைத்துள்ளது.

விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வரும் தே.சண்முகத்திற்கு தடய அறிவியல் துறையில் கடந்த 34 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்தமைக்காக,இந்த ஆண்டு அண்ணா பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசு ரூ.20,000/- (ரூபாய் இருபதாயிரம் மட்டும்), முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்வுயரிய விருது பெற்றதற்கு இவரது சொந்த கிராமமான செஞ்சி வட்டம், நல்லான்பிள்ளைபெற்றாள் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு மாவட்டத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!