விழுப்புரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விழுப்புரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமதிலகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மலர்விழி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் லட்சுமிதேவி கலந்து கொண்டு பேசினர்.

சிலிண்டருக்கான முழுத்தொகையை வழங்க வேண்டும், இல்லையெனில் வருடத்திற்கு 4 சிலிண்டரை அரசே ஏற்று வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்திப் பேசினர்.

ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் சந்திரா, சாந்தி, சீதா, மீனா, தீபா, கோவிந்தம்மாள், சரளா, சுதா, தமிழ்ச்செல்வி, மஞ்சுளா, வைதேகி உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் பொருளாளர் புனிதா நன்றி கூறினார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது