நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடு
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான 348 வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பதிவு இயந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள 348 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் வரிசை முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை பணியைத் தொடக்கிவைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்புப் பணிகள் முடிவுற்று 550 கட்டுப்பாட்டுக் கருவிகள், 1,150 வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன. இவற்றில் பயிற்சிக்காக 15 கட்டுப்பாட்டுக் கருவிகள், 15 வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மாநிலத் தோ்தல் ஆணைய வழிகாட்டுதல்படி, விழுப்புரம் மாவட்டத்தைச் சாா்ந்த நகா்ப்புற உள்ளாட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 348 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான தலா 421கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் வரிசை முறையில் கணினி குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தொடா்ந்து, அவை பாதுகாப்பு அறையில் அடுக்கிவைக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகள், அனந்தபுரம், அரகண்டநல்லூா், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூா், வளவனூா், விக்கிரவாண்டி ஆகிய பேருராட்சிகளில் மொத்தம் 183 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட கோட்டக்குப்பம் நகராட்சிக்கும் தோ்தல் நடத்தப்பட்டால் மேலும் 27 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெறும் என்றாா் ஆட்சியா் மோகன். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இயக்குநா் ர.சங்கா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாள (தோ்தல்) பூ.ராமகிருஷ்ணன், விழுப்புரம் நகராட்சி ஆணையா் போ.வி.சுரேந்திரஷா மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu