விழுப்புரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி

விழுப்புரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி
X
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு இருந்து ரயில் நிலையம் வரை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி நடைபெற்றது.

விழுப்புரத்தில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் குடியரசு தின உறுதிமொழி ஏற்பு பேரணி சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி,தொமுச நிர்வாகி ஞானப்பிரகாசம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது,

பேரணி விழுப்புரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு இருந்து புறப்பட்டு ரயில் நிலையத்தில் முடிவடைந்தது, நிகழ்ச்சியில் சிஐடியு நிர்வாகிகள் மாவட்ட தலைவர் எஸ்.முத்துகுமரன், பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், எச்.ரகோத்மன், எம்.புருசோத்மன், கே.அம்பிகாபதி, கே.சேகர், ஏ.அருள்சோதி, கணபதி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!