உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம்
X

விழுப்புரத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர், கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பரமணியன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.டி.முருகன் உட்பட திமுக, அதிமுக, சிபிஐ, மதிமுக, உள்ளிட்ட அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினர்.

கூட்டத்தில் வருகின்ற 9 ந்தேதி வாக்குசாவடி திருத்தம் இருந்தால் தெரிவிக்கலாம் என்றும், வரும் 11 ந்தேதி வாக்குசாவடி பட்டியல் வெளியிடப்படும் என்று முடிவு செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு