கண்டாச்சிபுரம் வளர்ச்சி குழு மீண்டும் கோரிக்கை

கண்டாச்சிபுரம் வளர்ச்சி குழு மீண்டும் கோரிக்கை
X

வட்டாட்சியர் கார்த்திகேயனிடம் கண்டாச்சிபுரம் வளர்ச்சி குழு சார்பில் திங்கட்கிழமை10/ 01/2021 நினைவூட்டுதல் கடிதம் கொடுத்தனர்

கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு அனைத்து அரசு அலுவலகங்கள் கேட்டு அப்பகுதி வளர்ச்சி குழுவினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு வட்ட மருத்துவமனை மற்றும் நீதிமன்றம் வளாகம் கட்டிட வலியுறுத்தி கண்டாச்சிபுரம் வளர்ச்சி குழு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு வட்ட மருத்துவமனை மற்றும் நீதிமன்றம் வளாகம் கட்டிட வலியுறுத்தி அதற்கான திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில் வீரங்கிபுரம் எல்லையில் உள்ள அரசுக்கு சொந்தமான கல்லாங்குத்து புறம்போக்கு இடத்தினை தேர்வு செய்து மேற்கண்ட கட்டடங்களை கட்ட வலியுறுத்தி மீண்டும் வட்டாட்சியர் கார்த்திகேயனிடம் கண்டாச்சிபுரம் வளர்ச்சி குழு சார்பில் திங்கட்கிழமை10/ 01/2021 நினைவூட்டுதல் கடிதம் கொடுத்தனர்.கடந்த 01/09/2021 அன்று அப்பகுதியை சேர்ந்த அனைத்துக் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் அமைப்புகள் சார்பில் கண்டாச்சிபுரம் வளர்ச்சிக் குழு உருவாக்கி ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணமதி தலைமையில் தொடர்ந்து கோரிக்கை வலியுறுத்தி

06/09/2021 அன்று கண்டாச்சிபுரம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களோடு வளர்ச்சி குழு சார்பில் நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தனர், 10 ந்தேதி திங்கட்கிழமை கண்டாச்சிபுரம் வளர்ச்சி குழுஒருங்கிணைப்பாளர் எஸ்.கணபதி தலைமையில் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயனிடம் மீண்டும் நினைவூட்டும் விதமாக கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags

Next Story
ai powered agriculture