எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு விமான நிலைய வாடிக்கையாளர் பயிற்சி

எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு விமான நிலைய வாடிக்கையாளர் பயிற்சி
X

கலெக்டர் மோகன் (கோப்பு படம்)

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு விமான நிலைய வாடிக்கையாளர் பயிற்சி அளிக்கபட உள்ளது., அதற்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் விமான நிலைய வாடிக்கையாளர் சேவை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

விழுப்புரம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது, ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி. ஏவியேஷன் அகாடமி நிறுவனம் மூலமாக, விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில், ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் பயிற்சி பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 18 வயது முதல் 25 வயது உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்கான கால அளவு 3 மாதமும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவுத்தொகையான ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும்.

இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் ஏஏஎஸ்எஸ்சி (AERO SPACE SKILL SECTOR COUNCIL) -லால் அங்கீரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களான Indigo Airlines, Spice Jet, Go first, Vistra, Air India போன்ற புகழ்வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரிய நூறு சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம் என, அவர் தெரிவித்துள்ளார்.

தாட்கோ திட்டங்கள், மக்களை முழுமையாக சென்று சேர விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

இதேபோன்று மாவட்டத் தாட்கோ மூலம் படிப்பு முடித்துள்ள தகுதி வாய்ந்த எஸ்சி எஸ்டி இளைஞர்களுக்கு லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கி வருகிறது, மேலும், எஸ்.எஸ்.டி மக்களுக்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கடனுதவி வழங்கி, அவர்களுடைய மேம்பாட்டுக்கு பல்வேறு வகையில் தாட்கோ உதவி செய்து வருகிறது, ஆனால் இது போன்ற உதவிகள் இருக்கிறது என்பது மாவட்டத்தில் படித்த தகுதி வாய்ந்த எஸ்சி,எஸ் டி இனத்தைச் சார்ந்த மக்களுக்கு, இளைஞர்களுக்கு இது முழுமையாக இதுவரையில் தெரியவில்லை, அதனால் அரசின் உதவி திட்டங்கள் போய் சேருகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மேலும், இந்தத் திட்டங்கள் குறித்து, இதனை செயல்படுத்தும் தாட்கோ எந்தவித விழிப்புணர்வு பணியிலும் அந்த மக்கள் மத்தியில் அவர்கள் இருக்கும் இடத்தில் இறங்கி செய்யப்படவில்லை அதனால் படித்து தங்கள் எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்யும் அந்த எஸ்சி,எஸ்டி இளைஞர்கள் அரசு அவர்களின் மேம்பாட்டு திட்டங்கள் என்ன என்பது ஒன்றும் தெரியாமல் இருக்கும் நிலையில் தான் உள்ளனர்,

அதனால் தாட்கோ நிறுவனம் எஸ்சி,எஸ் டி மக்களின் பகுதிகளில் ஒவ்வொரு ஊராட்சி, வட்டாரம், ஒன்றியம் வாரியாக அரசு அம்மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தும் திட்டங்களை அம்மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும், என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!