28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிற் சங்கத்தினர்.

Farmer Protest News- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmer Protest News-விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அர்ச்சுணன் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் முத்துகுமரன், மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டு நூறுநாள் வேலையை 200 நாளாக்கி, தின கூலியாக ரூ.600 வழங்க வேண்டும்.

55 வயது கடந்த அனைத்து முதியோர்களுக்கும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாய கூலி தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி, அதில் ரூ.5லட்சம் மதிப்பில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிற் சங்கத்தினர் துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் உலகநாதன், மாவட்ட துணைச்செயலாளர் கலியமூர்த்தி உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai healthcare products