ஒன்றிய அரசை கண்டித்து விழுப்புரத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து விழுப்புரத்தில் விவசாய தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டம்
X
விழுப்புரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாபட்டடம்  செய்தனர்.
விழுப்புரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசின் நூறுநாள் வேலையில் ஜாதியை புகுத்தி மக்களை பிரிக்கும் மக்கள் விரோத போக்கை கண்டித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

ஆர்ப்பாட்டத்திற்கு விதொச மாவட்ட தலைவர் வி.அர்ச்சணன் தலைமை தாங்கினார், ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் எஸ். முத்துக்குமரன், விதொச மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு மாவட்ட செயலாளர் ஏ.சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பேசினர்,

ஆர்பாட்டத்தில் சிபிஎம் நிர்வாகிகள் ஏ.கிருஷ்ணமூர்த்தி,வி.பாலகிருஷ்ணன்,பழனி,ஆர்.கண்ணப்பன்,மேகநாதன், எஸ்.பிரகாஷ், எஸ்.அபிமண்ணன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர், பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கொடுத்தனர்.

Tags

Next Story
ai future project