திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
X
விழுப்புரத்தில் சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நகர நிர்வாகிகள் பசுபதி, ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். திமுக அரசுக்கு எதிராக, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டு கண்டனம் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai healthcare products