அதிமுக, பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை : திருமாவளவன் கமென்ட்

அதிமுக, பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை :  திருமாவளவன் கமென்ட்
X

ஆணவ படுகொலைகளை தடுப்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும் திருமாவளவன் 

விழுப்புரத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், அதிமுக பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல உள்ளது என கூறினார்

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் அமைப்புக்கள் சார்பில் ஆணவ படுகொலைகளை தடுப்பது மற்றும் அது குறித்த பொது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது,

நிகழ்ச்சிக்கு மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் வன்முறைக்கும் எதிராகவும், மனித உரிமைகளுக்கும் எதிராகவும் முதலில் போராடிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. இதற்கு தமிழகத்தில் வரலாறு இருக்கிறது என்று கூறினார்.

அதிமுகவை பற்றி கூறுகையில், பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல் அதிமுக தற்போது பாஜகவிடம் மாட்டி கொண்டு முழிக்கிறது என்றார்,

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், எம்எல்ஏக்கள் ஜவகருல்லா, சிந்தனை செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!