விழுப்புரத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் பங்கேற்பு

விழுப்புரத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ் பங்கேற்பு
X

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டார்.

விழுப்புரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், தமிழகத்தில் ஆளுகின்ற அரசு மக்களை பற்றி சிந்திக்காத அரசு மொத்தத்தில் இது ஒரு "விளம்பர அரசு" என சாடினார்.

அதிமுக கட்சி தூய தொண்டர்களை அடையாளப்படுத்தும் கட்சி. ஆனால் திமுக கட்சி தொண்டர்களை மதிக்கத் தெரியாத கட்சி. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அவர்கள் வெற்றியினை வருகின்ற 16ஆம் தேதி அதிமுகவின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவில் காணிக்கை ஆக்க வேண்டும் என பேசினார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!