உரிமம் இல்லாமல் விதை விற்பனை: ஆட்சியர் எச்சரிக்கை

உரிமம் இல்லாமல் விதை விற்பனை: ஆட்சியர் எச்சரிக்கை
X

விழுப்புரம் ஆட்சியர் மோகன் 

Villupuram Today News -விழுப்புரம் மாவட்டத்தில் விதைகள் உரிமம் இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

Villupuram Today News -விதைகள் உரிமம் இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் தைப்பட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்ய முனைவார்கள். அரசால் அறிவிப்பு செய்யப்பட்ட பயிர் ரகங்களின் சான்று பெற்ற விதைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்யுமாறு அனைத்து விதை விற்பனையாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தனியார் விதை உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் தனியார் ரகங்களின் விதைகளை கொள்முதல் செய்யும்போது அந்த ரகங்கள் இந்த பருவத்திற்கும் பகுதிக்கும் உகந்தவைதானா என்பதை உறுதிசெய்து கொண்டு கொள்முதல் செய்ய வேண்டும். விதைகளுக்கான கொள்முதல் பட்டியலுடன் பதிவுச்சான்று நகல் மற்றும் விதைப் பரிசோதனை முடிவறிக்கை நகல் பெற்று பராமரிப்பதோடு ஆய்வின்போது காண்பிக்க வேண்டும்.

விதை வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனைப் பட்டியலில் அனைத்து விவரங்களும் குறிப்பிட்டு கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். பதிவுச்சான்று இல்லாத மற்றும் பரிசோதனை முடிவு அறிக்கை இல்லாத உண்மைநிலை விதைகளை விற்பனை செய்ய தடை விதிப்பதுடன், உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அனைத்து விதை விற்பனையாளர்களும் தங்களது விதை வணிக உரிமம் காலாவதியாகும் முன்னரே அவற்றை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். உரிமம் புதுப்பிக்காமலோ, உரிமம் பெறாமலோ விதை விற்பனை செய்யும் நிறுவனங்களின் மீது விதைகள் (கட்டுப்பாடு) ஆணையின்படி அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என கூறப்பட்டுள்ளது



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
latest agriculture research using ai