விழுப்புரம் தடகள வீரருக்கு குவிந்து வரும் பாராட்டுகள்

விழுப்புரம் தடகள வீரருக்கு குவிந்து வரும் பாராட்டுகள்
X

உலக தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று விழுப்புரம் திரும்பிய வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Athletics Games - உலகப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்று திரும்பிய விழுப்புரம் தடகள வீரருக்கு பாராட்டுகள் குறைந்து வருகின்றன.

Athletics Games -கொலம்பியாவில் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக தடகளப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் விழுப்புரத்தைச் சோ்ந்த தடகள வீரா் பரத் ஸ்ரீதா் கலந்துகொண்டு, கலப்பு தொடா் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

கடந்த திங்கள்கிழமை விழுப்புரம் வந்தடைந்தாா்.விழுப்புரம் ரயில் நிலையத்தில் வீரா் பரத் ஸ்ரீதருக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளா் ஜனகராஜ், திமுக மாவட்ட துணைச் செயலாளர் புஷ்பராஜ் ஆகியோா் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர்.

அவர் அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story