மழையில் செல்போனில் பேசியபடி சென்ற இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
விழுப்புரம் காவல் நிலையம் (பைல்படம்).
விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நள்ளிரவில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது விழுப்புரம் அருகே முத்தோப்பு பகுதியை சேர்ந்த ரியாஸ் ஆதான் (வயது 24) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் அப்போது செல்போனில் பேசியபடி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஜானகிபுரம் பகுதியில் சென்றார்.
அந்த சமயம் திடீரென்று ரியாஸ் ஆதான் மீது மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அக்கம் பக்கம் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்னல் தாக்கி பலியான ரியாஸ் ஆதான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu