விழுப்புரம் காவல் நிலைய வளாகத்தில் கிடந்த மண்டை ஓட்டால் பரபரப்பு

விழுப்புரம் காவல் நிலைய வளாகத்தில் கிடந்த மண்டை ஓட்டால் பரபரப்பு
X

விழுப்புரம் நகர காவல் நிலையம்.

விழுப்புரம் நகர காவல் நிலைய வளாகத்தில் காவல் நிலையம் பின்புறம் மண்டை ஓடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் நகர காவல் நிலையம் அருகே பெண் சடலம் கிடப்பதாக விழுப்புரத்தில் வேகமாக தகவல் பரவியது. உடனடியாக விழுப்புரம் டிஎஸ்பி பாா்த்திபன் மற்றும் போலீஸாா் சோதனை செய்ததில், நகர காவல் நிலையத்தின் பின்புறம் பெண் ஒருவரின் மண்டை ஓடு கிடந்தது தெரியவந்தது.

விசாரணையில், கடந்த 2020-ஆம் ஆண்டு விழுப்புரம் நகரில் அடையாளம் தெரியாத பெண் ஒருவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மண்டை ஓட்டினை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனா்.

இதற்காக மண்டை ஓடு நகர காவல் நிலையத்தின் பின்புறமுள்ள ஓா் அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தவறுதலாக அறையிலிருந்து வெளியே கிடந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்தனா். மேலும் இதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!