விழுப்புரம் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே பாலத்தில் இருந்து  தவறி விழுந்தவர் உயிரிழப்பு
X

வளவனூர் காவல் நிலையம் (பைல் படம்).

விழுப்புரம் அருகே குடித்து விட்டு பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விழுப்புரம் அருகே உள்ள ஏ.கே. குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று இவர் அதே கிராமத்தில் அரசமங்கலம் செல்லும் சாலையில் உள்ள சிறு பாலத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தவறி கீழே விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்