திருவெண்ணெய் நல்லூர் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் நிறுத்தம்
Child Marriage Cases in India -விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி திருவெண்ணெய்நல்லூர் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஊராட்சி மன்ற துணை தலைவர் ஒருவருக்கும், 17 வயதுடைய சிறுமிக்கும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர்.
இந்த நிலையில் இது குறித்த தகவல் சைல்டு லைனுக்கு கிடைத்தது. இதையடுத்து சமூக நலபாதுகாப்பு அதிகாரிகள், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமிக்கு திருமணவயதான 18 வயது எட்டவில்லை என்பது தெரிந்தது. அதனை தொடர்ந்து சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu