விழுப்புரத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

விழுப்புரத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
X

விழுப்புரம் காவல் நிலையம் பைல் படம்.

விழுப்புரத்தில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் நகராட்சி வி.மருதூர் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 48), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள தனது மருமகன் பிரகாஷ் (27) என்பவருடைய வீட்டில் சம்பவத்தன்று இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் மகன் திவாகர் (23) என்பவர் குடிபோதையில் அங்கு வந்து, யார் இங்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தியது, நான் பெரிய ரவுடி என்றும் என்னை கேட்காமல் எதுவும் நடக்கக்கூடாது என்றும் திட்டிக்கொண்டிருந்தார்.

மேலும் அவர் பிரகாஷின் வீட்டு கதவை கல்லால் அடிக்கும்போது அவரது மாமனார் விநாயகத்தின் தலையில் தாக்கியது. இதை தட்டிக்கேட்ட விநாயகத்தை திவாகர் கத்தியை காட்டி கொலை பண்ணி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து பிரகாஷ், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் திவாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!