விழுப்புரத்தில் 709 பேருக்கு ரூ. 4.21 கோடி நலத்திட்ட உதவிகள்

விழுப்புரத்தில் 709 பேருக்கு ரூ. 4.21 கோடி நலத்திட்ட உதவிகள்
X

விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 709 பேருக்கு ரூ.4.21 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

விழுப்புரத்தில் நடந்த விழாவில் 709 பேருக்கு ரூ.4.21 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பொன்முடி வழங்கினார் .

விழுப்புரத்தில் படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமை தாங்கினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் 150 பேருக்கு முதல் பட்டியல் தொகை விடுவித்தலுக்கான ஆணையும், வருவாய்த்துறை சார்பில் 204 பேருக்கு வீட்டுமனைப்பட்டாவும், 51 பேருக்கு பழங்குடியினருக்கான சாதிச்சான்றும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 7 மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு நேரடி வங்கி கடனுதவியும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் 38 பேருக்கு திருமண நிதியுதவியும், அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் 12 பேருக்கு திருமண நிதியுதவியும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் 17 பேருக்கு திருமண நிதியுதவியும், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டத்தின்கீழ் ஒருவருக்கு திருமண நிதியுதவி உள்பட மொத்தம் 709 பேருக்கு ரூ.4 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 520 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகரமன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் சங்கீத அரசி, கலைச்செல்வி, வாசன், சச்சிதானந்தம், தனலட்சுமி, உஷா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், நகரமன்ற துணைத்தலைவர் சித்திக் அலி, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!