விழுப்புரம் மாவட்டத்தில் காலை 9 மணி வரை 6.90 சதவீத வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டும் மழையில் வாக்களிக்க வரும் மூதாட்டி
விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் இன்று காலை 9 மணி வரை 6.90 சதவீத வாக்குபதிவு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது, அதில் இன்று காலை 9 மணி வரை நடைபெற்ற வாக்கு சதவீதம், முகையூர் ஒன்றியத்தில் 6.7 சதவீதமும், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 7.3 சதவீதமும், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 6 சதவீதமும், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 7.3 சதவீதமும்,ஒலக்கூர் ஒன்றியத்தில் 6.8 சதவீதமும், வானூர் ஒன்றியத்தில் 6.75 சதவீதமும், செஞ்சி ஒன்றியத்தில் 7.5 சதவீதமும் என மாவட்டத்தில் சராசரியாக 6.9 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் துறை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu