விழுப்புரம் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 508 மனுக்கள்
மனு அளிக்க வந்த ஒரு பெண்ணிடம் குறைகேட்டார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 508 மனுக்கள் வரப்பெற்றன.
விழுப்புரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் வாராந்திர கூட்டம் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர் பெருமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் என மொத்தம் 508 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி கடந்த (23.12.2022) அன்று திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், சித்தலிங்மடம் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது சவரிமுத்து மகன் ஜேம்ஸ்ராஜ் என்ற மாற்றுதிறனாளி மாணவர் சக்கர நாற்காலி வேண்டி கோரிக்கை மனுவினை வழங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பரிந்துரையின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியின் அடிப்படையில் திங்கட்கிழமை ஜேம்ஸ்ராஜ் என்ற மாற்றுதிறனாளி மாணவருக்கு சிறப்பு சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சியர் த.மோகன் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) சரஸ்வதி, கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை )சித்ரா விஜயன் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) சிவா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu