விழுப்புரம் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று
X
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

விழுப்புரம் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் 43 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீட்டில் இருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அவ்வப்போது கிருமி நாசினியை கொண்டு கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 154 ஆக இருந்த நிலையில் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களின் முடிவுகள் கிடைக்கப்பெற்றன. இதில் மேலும் 43 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 189 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil