விழுப்புரம் மாவட்டத்தில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

பைல் படம்.
Transfer In Tamil - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராதிகா திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், கஞ்சனூர் இன்ஸ்பெக்டர் எழிலரசி சிதம்பரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டடுள்ளனர். இதேபோல் விழுப்புரம் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், திருக்கோவிலூர் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளவழகி திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் பிறப்பித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu